ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு.! சிஎஸ்கே அணியின் புதிய பதவியில் பொறுப்பேற்ற பிராவோ.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!Bravo appointed as bowling coach for csk team

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல் ரவுண்டராக விளையாடி வந்தவர் டுவைன் பிராவோ. இவர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை வாங்கி தந்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவரது ஆட்டத்தால் பெரிய தாக்கங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் 39 வயது நிறைந்த பிராவோ சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும் வரும் 23ஆம் தேதி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில் பிராவோவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்தனர். இந்நிலையில் பிராவோ அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்தார். 

இதுகுறித்து பிராவோ கூறுகையில், எனது விளையாட்டு காலம் முடிந்தநிலையில், நான் தொடங்கியிருக்கும் இந்த புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இது எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுக்கிறது. எப்போதும் பந்துவீச்சாளர்களுடன் கலந்துறையாடி பேட்ஸ்மேன்களை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்பதற்கான திட்டங்கள், யோசனைகளை கொண்டு வர முயற்சி செய்வேன் என கூறியுள்ளார்.