உலகம் விளையாட்டு

பிரைன் லாரா: கிரிக்கெட்டுக்கு விராட் கோலி கிடைத்தது ஒரு பெரும் தலைவர் கிடைத்தது போல் உணருகிறேன்.!

Summary:

brain lara - viraht kohli - world cricket captan

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா, விராட் கோலியை கிரிக்கெட்டுக்கு ஒரு பெரும் தலைவர் கிடைத்ததை போல் உணர்கிறேன் என்று வெகுவாக பாராட்டியுள்ளார்.

உலகின் தலைசிறந்த 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இன்றும் வெளியிட்டால், அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாராவுக்கு கண்டிப்பாக அதில் இடமிருக்கும். ஏனென்றால் அவர் விளையாடக்கூடிய காலகட்டங்களில் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்பட்டவர்.

Image result for virat kohli

தற்சமயம் விராட் கோலியை உலக நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், லாராவின் பாராட்டு தனி சிறப்பு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 

ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் அவருடைய பாராட்டு மதிப்புக்குரியதாக உள்ளது.

Image result for virat kohli

விராட் கோலி குறித்து பிரைன் லாரா தெரிவிக்கும் பொழுது: 
இந்திய அணிக்கு விராட் கோலி கிடைத்தது அதிர்ஷ்டம். அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரர், கேப்டனைப் பார்த்தில்லை. அவர் கிரிக்கெட்டில் எது செய்தாலும் அது சாதனையாக தான் இப்போது உள்ளது. அவரின் பேட்டிங், அவரின் உடல்தகுதி ஆகியவை மற்ற வீரர்களே பாராட்டும் அளவிற்கு உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அவர் பல விஷயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கிரிக்கெட் ஆட்டத்துக்கும் கொடுக்கும் போது ஒரு பெரும் தலைவர் கிடைத்தது போன்று உணர்கிறேன். 

நான் விளையாடும் காலத்தில் என்னையும், சச்சினையும் ஒப்பிட்டு பல செய்திகள் வந்தன. அதற்கு நாங்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

Image result for virat kohli

தற்போது சச்சினுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ள கோலி குறித்து பல செய்திகள் வருகின்றன. ஆனால் அதை கோலி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறேன். அப்போது தான் அவரின் உயர்வு மேலும் அதிகரிக்கும். 

ஏனெனில் ஒப்பிடுவது தவறானது. ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் அந்த சூழலுக்கு ஏற்ப விளையாடியவர்கள். அதனால் ஒருவரின் சாதனையை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. 


 


Advertisement