விளையாட்டு

இனி பந்தில் எச்சில் துப்பக்கூடாது! வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு!

Summary:

Bowler angry for new rule

பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணி தற்போது கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். பொதுவாக விளையாடும்போது பந்துவீச்சாளர்கள் பந்தில் எச்சில் துப்பி பந்து வீசுவது வழக்கம். கொரோனா காரணமாக இனி அதில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் முடிவடைந்து கிரிக்கெட் போட்டி தொடங்கும் போது களத்தில் வீரர்கள் பந்தை எச்சில் அல்லது வியர்வையால் தேய்ப்பதற்கு பதிலாக செயற்கை பொருளை பயன்படுத்தி தேய்க்க அனுமதி அளிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பரிசீலித்து வருகிறது. 

இந்த முடிவுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மைக்கேல் ஹோல்டிங், வக்கார் யூனிஸ், ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பந்தை எச்சில் அல்லது வியர்வையால் தேய்ப்பது களத்தில் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்று. இதை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர். ‘வீரர்கள் அனைவரும் மருத்துவ ரீதியாக உரிய பாதுகாப்பான சூழலில் விளையாடுவார்கள் என்கிற போது, வீரர்களின் எச்சில் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும் என்று ஹோல்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement