நவம்பரில் சென்னை சேப்பாக்கத்தில் T20; BCCI அறிவிப்பு

நவம்பரில் சென்னை சேப்பாக்கத்தில் T20; BCCI அறிவிப்பு


Bcci announced t20 match in chennai

இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Ind vs wi t20

செப்டம்பர் 15 முதல் 28-ம் தேதி வரை ஆசிய கோப்பைக்காண தொடர் நடைபெறுகிறது. ஆசியப் போட்டிகள் முடிவடைந்த ஒரு வாரக் காலத்தில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.

Ind vs wi t20

இவ்விரு அணிகளும் 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்.,4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் அக்., 12-ம் தேதி முதல் 16 -ம் தேதி வரை நடைபெறுகிறது.

அக்டோபர் 21-ம் தேதி முதல் நவம்பர் 1 -ம் தேதி வரை ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை டி-20 போட்டிகள் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நவம்பர் 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.