விளையாட்டு

உசுரே போயிருக்கும்..!! கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லையாம்..!! இரண்டாக உடைந்த ஹெல்மெட்.. வைரல் வீடியோ..

Summary:

பாகிஸ்தான் வீரர் வீசிய பந்தில் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ காட்சி இணையத்தி

பாகிஸ்தான் வீரர் வீசிய பந்தில் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜிம்பாப்பே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது T20 போட்டிகளில் விளையாடிவருகிறது. சமீபத்தில் நடந்த 2 வது T20 போட்டியில் ஜிம்பாப்பே அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்துவீசினார்.

ஆட்டத்தின் 7 வது ஓவரை பாகிஸ்தான் அணி வீரர் அர்ஷத் இக்பால் வீசினார். அப்போது அந்த பந்தை ஜிம்பாப்பே அணி வீரர் கமுகுகான்வே எதிர்கொண்டார். அர்ஷத் இக்பால் வீசிய பந்து அதிவேக பவுன்சராகா மாறி பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டில் அதிவேகமாக தாக்கியது.

Pak bowler’s bouncer breaks Zimbabwean batsman's helmet into two

இதில் பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டை இரண்டாக உடைந்து கீழே விழுந்தது. இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் பதறிப்போயினர். பின்னர் ஜிம்பாப்பே அணியின் மருத்துவர்கள் மைதானத்திற்குள் வந்து பேட்ஸ்மேனை சோதனை செய்தனர். அவருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்பது உறுதியான பிறகு பேட்ஸ்மேன் மீண்டும் தனது ஆட்டத்தை தொடர ஆரம்பித்தார்.

பவுலர் வீசிய பந்தில் ஹெல்மெட் இரண்டாக உடைவது இதுவே முதல் முறை என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement