இந்தியா உலகம் விளையாட்டு

சானியா மிர்சாவிடம் சில்மிஷம், கிரிக்கெட் வீரர் மீது அதிரடி புகார் அளித்த கணவர் .!

Summary:

சானியா மிர்சாவிடம் சில்மிஷம், கிரிக்கெட் வீரர் மீது அதிரடி புகார் அளித்த கணவர் .!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் அத்துமீறி,தவறாக நடந்து கொண்டதாக வங்காளதேச கிரிக்கெட் வீரர் மீது அவரது கணவர் புகார் அளித்துள்ளார்.

 ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.கிராண்ட் இஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் இதுவரை ஆறு பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பல நாடுகளிலும் நடந்த டென்னிஸ் போட்டிகளில், இந்தியாவின் சார்பில் சிறப்பாக செயல்பட்டு சானியா மிர்சா பல பட்டங்களையம்,பெருமைகளையும் வென்றுள்ளார்.

 மேலும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். 

          sania mirza with husband க்கான பட முடிவு

இந்நிலையில் சானியாமிர்சாவிடம் வங்கதேச வீரர் ஒருவர் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாக அவரின் கணவர் சோயப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது அங்கு வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவின் முறை தவறி நடக்க முயன்றுள்ளார்.

 இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார்.

 மேலும் வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் மைதானத்திற்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கியதாகவும்,பேஸ்புக்கில் தவறான கருத்துக்களை பதிவிட்டு  சர்ச்சையில் சிக்கினார்.மேலும்  அதனால் அபராதம் விதிக்கப்பட்டு, 6 மாதம் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
.

மேலும் சானியா மிர்ஸா விடம் தவறாக நடந்து கொண்டதாக  அளிக்கப்பட்ட வழக்கிலும் அவர் மீது ஆயுட்கால தடை விதித்து  நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன .


Advertisement