விளையாட்டு

உயிருக்குயிரான சகோதரி மரணம்! பெரும் வேதனையுடன் உலக கோப்பையை வென்ற கேப்டன் அக்பர் அலி! வெளியான சோக செய்தி!

Summary:

bangladesh capain sister dead in delievery

தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் 13வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக வங்கதேச அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு தலைமை தாங்கியவர் அக்பர் அலி. இவரது இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு பின்னால் பெரும் சோகம் நிரம்பியுள்ளது. இது குறித்த செய்திகள் தற்போது வங்கதேச பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது

அதாவது உலக கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கேப்டன் அக்பரின் மூத்த சகோதரி கதீஜா கதுன் என்பவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அக்பரின் கவனம் சிதறிவிடுமோ என்று இந்த செய்தியை அவரது குடும்பத்தினர் அக்பரிடம் தெரிவிக்காமல் மறுத்துள்ளனர். 

bangladesh captain akbar aliக்கான பட முடிவுகள்

அதனை தொடர்ந்து உயிருக்கு மேலான பாசம் கொண்ட தனது சகோதரி உயிரிழந்தது, சகோதரர் ஒருவர் மூலம் தெரியவந்த நிலையில் அக்பர் வேதனையில் துடித்துள்ளார். ஆனால் அவர் தனது சோகத்தை வெளியே காட்டி கொள்ளவில்லை.அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றுள்ளார்.  அச்சமயத்தில் வங்கதேச அணி பாகிஸ்தானுடனான போட்டியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்த செய்தி தற்போது வெளிவந்த நிலையில் அக்பர் தலைமைக்கு  பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement