மாஸ் காட்டிய மார்ஸ்..! மொத்தமாக மாறிய ஆட்டம்.! கோப்பையை தட்டிச்சென்ற ஆஸ்திரேலியா.!

மாஸ் காட்டிய மார்ஸ்..! மொத்தமாக மாறிய ஆட்டம்.! கோப்பையை தட்டிச்சென்ற ஆஸ்திரேலியா.!


australia-won-t20-world-cup

7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர். டேரில் மிட்செல் 11 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆன நிலையில், கேன் வில்லியம்சன் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதிரடியாக ஆடிய கேன் வில்லியம்சன் 48 பந்துகளுக்கு 85 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் களமிறங்கினர். பின்ச் 5 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய மார்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய துவக்க வீரர் டேவிட் வார்னர் 38 பந்துகளுக்கு 53 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கினார்.

மார்ஸ்-மேக்ஸ்வெல் ஜோடிசேர்ந்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று T20 உலக கோப்பையை கைப்பற்றியது. மார்ஸ் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.