ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் டோனி, ஹர்திக் பாண்டியா சேர்ப்பு.!

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு; மீண்டும் டோனி, ஹர்திக் பாண்டியா சேர்ப்பு.!


australia, newsiland oneday series india team announced

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. ஆஸ்திரேலியா தொடரை தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 5 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாட உள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

dhoni

இந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியில் பல தொடர்களுக்கு பிறகு காயத்திலிருந்து மீண்டுள்ள ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதோடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்படாமல் இருந்த தல தோனியும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விபரம்:
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (து. கேப்டன்), கே.எல் ராகுல், சிகர் தவான், ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, கலீல் அகமது, முகமது சமி