ஆஸ்திரேலியாவின் அதிரடியில் சுக்குநூறான இந்திய அணி.! உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.!

ஆஸ்திரேலியாவின் அதிரடியில் சுக்குநூறான இந்திய அணி.! உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.!


Australia beat india womens t20 world cup 2020

இன்று நடந்த உலகக்கோப்பை T20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி 5 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 184 ரன்கள் அடித்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக அலிசா ஹேலி 75 ரன்களும், பெத் மூனே 78 ரன்களும் எடுத்தனர். 185 என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதினாறு வயதான ஷபாலி வர்மா முதல் ஓவர்களில் இரண்டு ரன்களுடன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

cricket

இவரை தொடர்ந்து மற்ற வீராங்கனைகளுக்கு அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, 99 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 5 வது முறையாக T20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதுவரை ஒருமுறை கூட மகளிர் T20 உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு செல்லாத இந்திய அணி இந்தமுறை இறுதி போட்டிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.