இந்தியா விளையாட்டு

நூலிழையில் வெற்றியை நழுவிய இந்திய அணி!. எரிச்சலடைந்த ரசிகர்கள்!.

Summary:

asutrelia cricket team win by 4 runs

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20, 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடா் நேற்று தொடங்கியது. பிரிஸ்பைன் நகரில் நடந்த முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணியானது 16.1 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. அதனால், ஆட்டம் 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 

இதனால், இந்திய அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

தினேஷ் கார்த்திக் 13 பந்துகளில் 30 ரன்களும், ரிஷாப் பண்ட் 15 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்து நம்பிக்கை சேர்த்தனர். இருப்பினும் அவர்கள் கடைசி ஓவர்களில் அடுத்தடுத்து அவுட்டானதால், இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 169 ரன்களை மட்டும் எடுத்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாஅணி  4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை அபாரமாக வென்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.


Advertisement