விளையாட்டு

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்துவோம். பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்.

Summary:

asia cup-2018 india vs pakistan match aseed pakistan player

ஆசிய கோப்பை தொடர் தற்பொழுது துபாயில்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும்  விளையாடுகின்றன.

துபாயில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று 2வது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஹாங்காங் அணிகள் மோதின .  ஹாங்காங் அணியை வெறும் 116 ரன்களில் பாகிஸ்தான் சுருட்டியுள்ளது.

Image result for pakistan vs hong kong

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி, பாகிஸ்தான் அணியின் சிறப்பான பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 116 ரன்னில் ஆல்-அவுட்டாகி, பாகிஸ்தானுக்கு 117 ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எளிதாக எட்டியது, பாகிஸ்தான் அணி.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்,  விராட் கோலி இல்லாத இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டுள்ளார் .

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும் அட்டமாகத்தான் இருக்கும் . இந்தியா, பாகிஸ்தானை தவிர  உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் ஆட்டமாக இருக்கும் .  இரு அணிகளுமே வெற்றிக்காக வெறித்தனமாக ஆடும்.

Image result for india vs pakistan

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் சர்வதேச தொடர்களை தவிர மற்ற போட்டிகளில் ஆடுவதில்லை. அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் ஒருசில போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு எகிறுகின்றன. கடந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியதுதான் கடைசி. அந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து, தொடரை இழந்தது.


கடந்த 2008ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானுடனான இருநாட்டு கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) தொடர்ந்து புறக்கணித்து வந்தது.

இந்நிலையில் ஒருவழியாக அழுகாத குறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்ந்து பிசிசிஐ.,யிடம் தொடர்ந்து வலியுறுத்தியதால் கடந்த டிசம்பர் 2012 – ஜனவரி 2013ல் 2 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இருநாட்டு கிரிக்கெட் தொடரை இந்தியாவில் பிசிசிஐ., நடத்தியது.

Image result for india vs pakistan
ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரில் விராட் கோலி இல்லாததால் பாகிஸ்தான் அணி சற்று ஆறுதலாக உள்ளது. எனினும் இந்திய அணி ரோஹித் சர்மா, தவான், ராகுல், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் வலுவாக உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் அந்த அணி சார்பில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் உடனான இருநாட்டுகளுக்கு இடையேயான தொடரை முழுமையாக தடை செய்ய வேண்டும் அல்லது மீண்டும் துவங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்.


Advertisement