இந்தியா விளையாட்டு

சிஎஸ்கே அணியில் இருந்து 5 வீரர்கள் வெளியேற்றம்.! யார் அந்த 5 பேர்? நிர்வாகம் எடுக்கவுள்ள அதிரடி முடிவு.!

Summary:

இந்தாண்டு சி.எஸ்.கே அணியில் இருந்து 5 வீரர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொரோனா பரவல் காரணமாக நடக்குமா? நடக்காதா? என்று இருந்த சூழ்நிலையில், கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டு, மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை 5 ஆவது முறையாக கைப்பற்றியது. இந்த 13வது ஐபிஎல் சீசனில் தான் சிஎஸ்கே அணி முதல் முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் அணியிலிருந்து விலகியது அந்த அணிக்கு பேரிழப்பாக இருந்தது. தற்போது 2021 இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங் 2021 ஆண்டு நடைபெறும் 14வது ஐபிஎல் சீசனுக்காக தனது அணியின் புதுமுக வீரர்களை தேர்வு செய்து வருகிறார். 

சென்னை அணியில் புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட அணி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. சிஎஸ்கே அணியில் தோனி, ஜடேஜா, பிராவோ, சாம் கரன், டு பிளசிஸ் ஆகியோர் மீண்டும் எடுக்கப்படுவார்கள். நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்கள் சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, கேதார் ஜாதவ் ஆகியோர் உறுதியாக வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரண் சர்மா, இம்ரான் தாஹிர் ஆகியோரும் நீக்கப்பட உள்ளனர். நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிம் செய்ஃபர்ட்டின் ஆட்டத்தை கண்டு ஸ்டீபன் பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வுசெய்யவுள்ளதாக சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement