விளையாட்டு

நேற்றைய போட்டிகளில் நடந்த நம்ப முடியாத சம்பவம்.! ஒரே நாளில் 3 சூப்பர் ஓவர்.! எகிறிய ஹார்ட் பீட்!

Summary:

நேற்று நடந்த இரண்டு ஐபில் போட்டிகளும் சூப்பர் ஓவர் முறைக்கு சென்று அதில் இரண்டு அணிகள் திரில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த இரண்டு ஐபில் போட்டிகளும் சூப்பர் ஓவர் முறைக்கு சென்று அதில் இரண்டு அணிகள் திரில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று மாலை ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டையில் முடிந்தது. 20 ஓவர் முடிவில் இரண்டு அணிகளும் 163 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து அந்தப் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றதால் இரு அணி ரசிகர்களும் போட்டியின் முடிவை காண மிகவும் ஆர்வமுடன் இருந்தனர்.

இதனை அடுத்து சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 2 விக்கெட்களையும் இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் நான்கு பந்துகளில் வெற்றி இலக்கை எட்டினர். இதன் மூலம் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணி விளையாடிய ஆட்டம்தான் இப்படி என்றால் நேற்று இரவு பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் அதையும் தாண்டி மிகவும் சுவாரசியத்தை ஏற்பத்தியது.

மும்பை மற்றும் பஞ்சாப் போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் குவித்தன. இதனால் போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே அடித்தது. 6 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் 6 பந்தில் அதே 5 ரன்களை அடித்ததால் ஆட்டம் மீண்டும் சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது.

இந்த முறை மும்பை அணி 6 பந்துகளில் 11 ரன்கள் அடித்தனர். 12 என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் 12 ரன்கள் அடித்து இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றனர். இப்படி ஒரேநாளில் இரண்டு போட்டிகளும் சூப்பர் ஓவர் முறைக்கு சென்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.


Advertisement