இந்தியா விளையாட்டு

2021 ஐபிஎல் தொடர் தேதி அறிவிப்பு.! முதல் போட்டி சென்னையில் தான்.! ஆனால் சிஎஸ்கே விளையாடவில்லை.!

Summary:

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்.9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்து

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்.9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில், ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் போட்டி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தவருடம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த மாநில அரசு அனுமதி அளித்தால் மும்பையிலும் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்  மோத உள்ளன. ஏப்ரல் 10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மோதவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30 ஆம் தேதி நடைபெறுகிறது. பிற்பகல் போட்டிகள் 3.30 மணிக்கும் இரவு நடைபெறும் போட்டிகள் 7.30 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement