தமிழ்நாட்டு மருமகளாகும் அமெரிக்க இளம்பெண்.! இவங்களோட காதல்பின்னணியை கேட்டா நீங்களே ஷாக்காகிருவீங்க!!
தமிழ்நாட்டு மருமகளாகும் அமெரிக்க இளம்பெண்.! இவங்களோட காதல்பின்னணியை கேட்டா நீங்களே ஷாக்காகிருவீங்க!!

அமெரிக்கா கரோலினாவில் ஷான்போர்டு நகரை சேர்ந்தவர் பிரட்டி.22 வயது நிறைந்த இவர் தமிழ் மொழியின் மீது உள்ள ஆர்வத்தால், தமிழ் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.
இந்நிலையில் அவருக்கு பேஸ்புக் மூலம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசித்து வந்த சூரியபிரகாஷ் என்பவருடன் நட்பு கிடைத்துள்ளது. அவரும் தமிழ் கலாச்சாரம், தமிழரின் பெருமைகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பிரட்டியுடன் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இவர்களது நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது.
அதனை தொடர்ந்து செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்துக் கொண்ட இருவரும் தங்களது காதல் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
மேலும் இருவரது பெற்றோர்களும் சம்மதம் நிலையில், சமீபத்தில் பிரட்டி மற்றும் சூரிய பிரகாஷ் இருவருக்கும் திட்டக்குடியில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்நிலையில் இது குறித்து
பிரட்டி கூறுகையில், எனக்கு தமிழ் கலாச்சாரம், இங்கு அணியும் உடை, உணவு மற்றும் அனைவரும் பாசமாக பேசுவது என அனைத்தும் மிகவும் பிடித்துள்ளது. தற்பொழுது தமிழ் கலாச்சாரப்படி சேலை கட்டி வருகிறேன். மேலும் அமெரிக்காவிலிருந்து எனது உறவினர்கள் சிலர் வர உள்ளனர். அவர்கள் வந்ததும் திருமண தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் எங்களது திருமணம் நடைபெறும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.