ஒரு காலத்தில் தீண்டத்தகாத கட்சியாக இருந்தீர்கள்; கடந்த கால வலராற்றை நினைத்து பாருங்கள்: பா.ஜனதாவை சீண்டும் உபேந்திர சிங்..!

ஒரு காலத்தில் தீண்டத்தகாத கட்சியாக இருந்தீர்கள்; கடந்த கால வலராற்றை நினைத்து பாருங்கள்: பா.ஜனதாவை சீண்டும் உபேந்திர சிங்..!


You were once an untouchable party and think of the power of the past

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், அந்த கூட்ட்ணியில் இருந்து சமீபத்தில் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 8 வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்பு இரு கட்சிகளிடையேயான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்த கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கடந்த வாரம் தொடங்கி அறிக்கை போரினை நடத்தி வருகின்றனர். சமீபத்தில்,பா.ஜ.க-வுக்கு நிதிஷ் குமார் நன்றியுடன் இருந்திருக்க வேண்டும். பல முறை அவரை பா.ஜ.க மத்திய மந்திரியாக்கியது. பீகார் சட்டசபையில் எண்ணிக்கையில் குறைந்த பலத்துடன் இருந்த போதும், அவரை முதலமைச்சராக அமரவைத்தது என்று சுஷில் மோடி மற்றும் ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கூறினர்.

இதனை தொடர்ந்து, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன், ஐக்கிய ஜனதா தளம் கட்சி இணைந்து விடும் என்று சுஷில் மோடி கூறினார். இது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான உபேந்திர சிங் இன்று பேசுகையில், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடன், ஐக்கிய ஜனதா தளம் கட்சி இணைந்து விடும் என பா.ஜனதாவை சேர்ந்த சுஷில் குமார் மோடி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது மட்டுமின்றி, புண்படுத்த கூடிய பேச்சாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் 1996 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எந்தவொரு அரசியல் கட்சியும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதில்லை. அப்போதெல்லாம் தீண்டத்தகாத கட்சியாக இருந்தீர்கள். அதன்பின்னர், சமதா கட்சியும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தன. அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டுக்கு பின்பே பிராந்திய கட்சிகள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தன.

தீண்டத்தகாத நிலையில் இருந்த பா.ஜனதா தீண்டத்தக்க கட்சியானது. ஜார்ஜ்-நிதிஷ் ஆதரவு இல்லையென்றால் பா.ஜனதாவின் தடமே இன்று இருந்திருக்காது என அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவேளை உங்களிடம் நன்றியுணர்வு எதுவும் இருக்கும் என்றால் இந்த வரலாற்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் உபேந்திர சிங் கூறியுள்ளார்.