அதிமுக - அமமுக-வை இணைக்கிறதா பாஜக.? சசிகலா வந்ததும் என்ன நடக்க போகிறது.?
அதிமுக - அமமுக-வை இணைக்கிறதா பாஜக.? சசிகலா வந்ததும் என்ன நடக்க போகிறது.?

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், ஜனவரி 2021-க்கு முன்னரே சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற டிடிவி.தினகரன், பாஜகவின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.
சசிகலா வெளியே வந்தால் என்ன மாதிரியான அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பது குறித்து டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும், டெல்லிக்கு தனி விமானத்தில் தினகரன் சென்று டெல்லி மேலிடத்தில் இது தொடர்பாக விவாதித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. சசிகலா அவர்கள் வெளியே வந்ததும் அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம் இருக்கவேண்டும் என பலர் விரும்புவதாக கூறப்படுகிறது.