எனக்கு பசியும், பட்டினியும் நல்லவே தெரியும்! நான் தேவ தூதனோ... இல்ல மன்னர் பரம்பரையோ இல்லை! முதல்வர் விஜய்யின் உருக்கமான பேச்சு...!!!



vijay-takes-oath-as-tamil-nadu-chief-minister

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பிறகு பொதுமக்களிடம் உரையாற்றிய விஜய், தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

உணர்ச்சிபூர்வமாகப் பேசிய அவர், தனது அரசியல் பயணம் எளிதானதல்ல என்றும், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் நான். வறுமையும், பசியும் என்றால் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் ஏதோ மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. “நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான்” என்று கூறியபோது அரங்கில் இருந்த தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை

தமிழக அரசின் தற்போதைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக விஜய் தெரிவித்தார். முந்தைய ஆட்சி காலத்தில் அரசின் கஜானா காலியாகிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், உண்மையான நிதிநிலையை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

இதையும் படிங்க: கஜானா மொத்தமும் காலி...தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்! செம ஷாக்கில் திமுக...!!!

மேலும், “என்னால் செய்ய முடிந்ததை மட்டுமே சொல்வேன். தேவையற்ற வாக்குறுதிகள் அளிக்க மாட்டேன். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.

சினிமாவிலிருந்து அரசியல் வரை

தனது ஆரம்ப காலங்களை நினைவுகூர்ந்த விஜய், “ஒரு உதவி இயக்குநரின் மகனாக சினிமாவில் அறிமுகமானேன். வறுமையும் பசியும் என்ன என்பதை நன்றாக அறிந்தவன் நான்” என்று கூறினார். அரசியலிலும் பல அவமானங்களையும் சவால்களையும் கடந்தே இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் அன்பும் நம்பிக்கையும் தான் தன்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்ததாகக் கூறிய அவர், இந்த ஆட்சி மக்கள் ஆட்சி என்ற செய்தியையும் தனது உரையில் வலியுறுத்தினார்.

முதல் நாளிலேயே முக்கிய அறிவிப்புகள்

பதவியேற்ற உடனேயே மூன்று முக்கிய திட்டங்களில் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு படை அமைக்கும் கோப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசின் முதல் நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பரவலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

இதையும் படிங்க: இத யாருமே எதிர்பார்க்கல.... மேடையில் மேஜையை தூக்கிச் சென்ற CM விஜய்! வைரலாகும் அந்த ஆச்சரிய காட்சி...!!!