கஜானா மொத்தமும் காலி...தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்! செம ஷாக்கில் திமுக...!!!



vijay-first-speech-white-report-tamilnadu

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்களுடன் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றிய அவர், தமிழக அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

“உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான்”

பதவியேற்பு விழாவிற்கு பிறகு உரையாற்றிய விஜய், தனது வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்ந்தார். “சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று போராடிய ஒரு உதவி இயக்குநரின் மகனாகவே நான் அறிமுகமானேன். வறுமை, பசி என்ன என்பதைக் கண்டவன் நான். மன்னர் குடும்பத்தில் இருந்து வந்தவன் அல்ல; உங்கள் வீட்டில் ஒருவன் தான்,” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

மக்கள் தந்த அன்பும் ஆதரவும் தான் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “சி. ஜோசப் விஜய் என்னும் நான் என்ற அடையாளத்தை உண்மையாக்கியது மக்கள் தான்,” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: விவசாயிகள் முதல் மாணவர்களின் வேலை வரை விஜய் வெளியிட்ட அதிரடி தேர்தல் வாக்குறுதி!! முழு லிஸ்ட் இதோ.....!!!

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை குறித்து பேசும்போது, முந்தைய ஆட்சியை மறைமுகமாக விமர்சித்தார். “மிகவும் மோசமான நிதி சூழ்நிலையில்தான் அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழக அரசின் உண்மையான நிதி நிலை என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

தகவலின்படி, மாநிலத்தின் கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

“பொய் வாக்குறுதிகள் இருக்காது”

தன்னுடைய ஆட்சி முறை குறித்து பேசிய விஜய், “நான் தேவதூதன் கிடையாது. உங்களைப் போல சாதாரண மனிதன் தான். என்னால் செய்ய முடிவதை மட்டுமே சொல்வேன். தேவையற்ற பொய் வாக்குறுதிகள் தர மாட்டேன்,” என்று தெரிவித்தார்.

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும், அதற்காக மக்களிடம் சிறிய அவகாசம் கேட்டுக் கொண்டார். அரசியல் பயணத்தில் பல அவமானங்களையும் சவால்களையும் சந்தித்தே இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் உரையில் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க: #Just In: கோட் சூட்டுடன் வீர நடையில் வந்த விஜய்....! கொண்டாட்டத்தில் நேரு ஸ்டேடியம்... வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..!!!