முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்! இரு தரப்புக்கும் கோர்ட்டின் திடீர் உத்தரவு..!!!



vijay-sangeetha-divorce-case-hearing-postponed

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று விசாரணை நடைபெற இருந்த நிலையில், விஜய் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் ஏற்காததால் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரன்ஸ் கோரிக்கை நிராகரிப்பு

இந்த வழக்கில் முன்னதாக இருவரும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகியிருந்தனர். அதேபோல் இன்றைய விசாரணையிலும் நேரில் ஆஜராகாமல் காணொளி வாயிலாக பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்! விவாகரத்து கேட்கும் சங்கீதா... அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!

இரு தரப்புக்கும் நீதிமன்ற உத்தரவு

விசாரணையின் போது, இரு தரப்பினரும் தங்களது இ-மெயில் முகவரிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.

பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளியா?

முன்னதாக, முதலமைச்சர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது. பின்னர் அவர் தனது முடிவை மாற்றி கணவருடன் மீண்டும் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்து வருவதும், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் அந்த தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. அடுத்த விசாரணையில் வழக்கின் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: விஜய் -சங்கீதா புகைப்படத்துடன் தவெக கூட்டத்திற்கு வந்த தொண்டர்! கூட்டத்தில் பரபரப்பு!!!