கெத்து காட்டும் தவெக தலைவர்.... திடீரென விஜய் வீட்டு முன் குவிந்த நூற்றுக்கணக்கான போலீசார்! மாலை பொழுதில் மாறிய தமிழக அரசியல் சூழல்..!!!



vijay-house-police-security-returned

தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகமாக மாறி வரும் நிலையில், விஜய் வீட்டுக்கு மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் முன்பு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அரசியல் சூழ்நிலையின் மாற்றத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாபஸ் பெறப்பட்ட பாதுகாப்பு மீண்டும் அமல்

முன்னதாக, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லை என்ற காரணத்தால் ஆளுநர் தரப்பில் விஜய் அழைக்கப்படவில்லை. அதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென திரும்பப் பெறப்பட்டது. இது தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மாநில அரசியல் களத்தில் அடுத்தடுத்த ஆலோசனைகள் நடைபெற்றன. பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகளும் வேகமாக மாறத் தொடங்கின.

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்....ஆளுநர் மாளிகையில் தெரியப்போகும் 3 மணி க்ளைமாக்ஸ்! விஜய்யின் கையில் இருக்கும் அந்த 'ரகசிய' கடிதம்.! நேரு ஸ்டேடியத்தில் தீவிர ஏற்பாடுகள்....!!!

கூட்டணி ஆதரவால் மாறிய சூழ்நிலை

தகவலின்படி, காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கடிதங்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், விஜய் தரப்பு பெரும்பான்மையை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

அதன்பின், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை மீண்டும் நீலாங்கரையில் போலீசாரை குவித்துள்ளது. போலீஸ் வாகனங்களும் தொடர்ந்து விஜய் இல்லம் அருகே நிறுத்தப்பட்டிருந்தன.

அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு எதிர்பார்ப்பு

விஜய் இல்லம் முன்பு அதிகரித்துள்ள போலீஸ் பாதுகாப்பு, தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகள் விரைவில் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கோட்டையை நோக்கிய அரசியல் பரபரப்பு மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: BREAKING : அடி தூள்.....விஜய்யுடன் கையை கோர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...! இனி கோட்டையை ஆளப்போவது தவெக தலைவர் விஜய் தான்!!!