சற்று முன்.... விஜய் முதல்வர் பதவி பொறுப்பேற்றதும் பெண்களுக்காக விஜய் போட்ட முதல் கையெழுத்து இதுதான்! முழு திட்டங்கள் இதோ...!!!



vijay-first-signature-free-electricity-tamilnadu

தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்த சில மணி நேரங்களிலேயே தனது முதல் அரசு கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் தனிப்பெரும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

9 அமைச்சர்களுடன் பதவியேற்ற விஜய்

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், டாக்டர் பிரபு, கீர்த்தனா, ஆதவ் ஆதர்ஜனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்....ஆளுநர் மாளிகையில் தெரியப்போகும் 3 மணி க்ளைமாக்ஸ்! விஜய்யின் கையில் இருக்கும் அந்த 'ரகசிய' கடிதம்.! நேரு ஸ்டேடியத்தில் தீவிர ஏற்பாடுகள்....!!!

முதல் கையெழுத்தில் இலவச மின்சாரம்

பதவியேற்புக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி, தமிழகத்தில் 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘சிங்கப்பெண்’ அதிரடி படைக்கும் ஒப்புதல்

அதன்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவிக்கப்பட்டிருந்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடி படையை அமைக்கும் கோப்பிலும் விஜய் கையெழுத்திட்டார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் விரைவு நடவடிக்கைகளுக்காக இந்த பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: BREAKING : ஜோசப் விஜய் எனும் நான்.... தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராக ஆக நேரு அரங்கில் பொறுப்பேற்றார் தவெக தலைவர் விஜய்.!!!