அடுத்த ஆப்பு ரெடி! 33-ல் 9 தான் பெஸ்ட்...! அமைச்சரவையில் நடக்கப்போகும் அந்த பெரிய மாற்றம்....! அட்டூழியத்தை ஒழிக்க போகும் முதல்வர் விஜய்! பதறவைக்கும் உளவுத்துறை ரிப்போர்ட்.!!!



vijay-cabinet-reshuffle-after-budget-session

தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் முதல் முறையாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைவரும் புதிய முகங்கள். இந்த நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கிடைத்துள்ள உளவுத்துறை அறிக்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

33 அமைச்சர்களில் 9 பேரின் செயல்பாடுகள் மட்டுமே திருப்தியா?

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தனது அரசின் முக்கியக் கொள்கையாக விஜய் முன்னிறுத்தி வருகிறார். அமைச்சர்களும் அதே பாதையில் செயல்பட வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர்கள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் செயல்பாடுகளை உளவுத்துறை கண்காணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்.... தவெக- வில் த்ரிஷாவுக்கு முக்கியப் பொறுப்பு? CM விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிகையால் அதிரும் அரசியல் களம்..!!!

அதன் அடிப்படையில் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் அறிக்கையில், தற்போதுள்ள 33 அமைச்சர்களில் 9 பேரின் செயல்பாடுகள் மட்டுமே திருப்திகரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக வெளியான தகவல்களால் அதிருப்தியில் இருந்த விஜய்க்கு, இந்த அறிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம்?

ஒருபுறம் கூட்டணி கட்சிகளின் நெருக்கடி, மறுபுறம் சொந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் என முதலமைச்சர் விஜய் இரட்டைச் சவாலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செயல்பாட்டில் திருப்தி அளிக்காத அமைச்சர்களை நீக்கிவிட்டு, திறமையாக செயல்படும் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்காக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கைகளையும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டுள்ளதாக தகவல்.

பதவியை தக்கவைக்க அமைச்சர்கள் முயற்சி

இதற்கிடையே, மாற்றம் ஏற்படக்கூடிய பட்டியலில் இருப்பதாக கருதப்படும் அமைச்சர்கள் தங்களது பதவியை தக்கவைத்துக்கொள்ள தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் மூலம் தங்களது செயல்பாடுகள் குறித்து சாதகமான தகவல்களை கொண்டு செல்லவும் அவர்கள் முயன்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு தமிழக அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. விஜயின் அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பது அரசியல் களத்தில் தொடர்ந்து கவனிக்கப்படும் விஷயமாகியுள்ளது.

 

இதையும் படிங்க: என்ன பேச்சு பேசுற? உதயநிதி பேச்சுக்கு ஆப்பு வைத்த முதல்வர் விஜய்! தமிழக அரசியலில் வெடித்த வெடிகுண்டு...!!!