அதெல்லாம் விட்டுட்டு இந்த வேலையில் கவனம் செலுத்துங்க..! அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு...!!!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு மத்தியில், 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் முழு கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஊகங்களைக் கண்டு கவலைப்பட வேண்டாம் என்றும், மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அண்மையில் சில அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்றும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ராஜ்மோகனிடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் வழங்கிய அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஆளும் ஆட்சியை காப்பாற்ற தவெக போடும் பிளான்! டெல்லியில் நடந்த ரகசிய ஆபரேஷன்.. CM விஜய்யின் வியூகம் ஒர்க் அவுட் ஆகுமா..?!!!
அமைச்சரவை மாற்றம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சு
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அமைச்சர் ராஜ்மோகனுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்படைக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவின. அதேபோல், அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி மற்றும் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் பதவியை இழக்கக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதனால் அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இந்த ஊகங்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என முதல்வர் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் கூறுகிறது.
2027-28 பட்ஜெட்டில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தல்
வரும் 2027-28 நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது ஆகியவற்றில் அமைச்சர்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் குறித்த வதந்திகளைத் தவிர்த்து, அரசின் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற முதல்வரின் இந்த அறிவுறுத்தல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: எம். எல். ஏக்களுக்கு அவசர மீட்டிங்..! ஆக்ரோஷத்தில் முதல்வர் விஜய்... பனையூரில் வெடிக்கப் போகும் வெடிகுண்டு! பரபரக்கும் தலைமை செயலகம்..!!,