என்ன ஒரு மனசு பாருங்க...! முதலமைச்சர் விஜய் பிறந்தநாளில் மக்களுக்கு அமைச்சர் சொன்ன சர்ப்ரைஸ் நியூஷ்..! கொண்டாட்டத்தில் தமிழக மக்கள்..!!!



vijay-birthday-free-entry-tamil-nadu-zoos

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தின் மூன்று முக்கிய உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் இலவசமாகச் செல்லும் வகையில் சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நலப் பணிகளை மையமாகக் கொண்டு பிறந்தநாள் நிகழ்வுகளை கொண்டாட வேண்டும் என்ற நடைமுறையை தொடர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500....! அமைச்சர் சொன்ன சூசக பதில்.... அப்போ நாளை தெரிஞ்சுடும்!

மூன்று உயிரியல் பூங்காக்களில் இலவச அனுமதி

இந்த சிறப்பு திட்டத்தின் கீழ், வண்டலூர் உயிரியல் பூங்கா, மேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு இரண்டு நாட்களும் இலவச நுழைவு வழங்கப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வழக்கமான நடைமுறையின்படி இணையதளம் மூலம் இலவச நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோடை விடுமுறைக்குப் பிறகு குடும்பத்துடன் சுற்றுலா செல்லத் திட்டமிடும் பலருக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நுழைவுக் கட்டணத்தை ஏற்கும் தவெக தரப்பு

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். இரண்டு நாட்களுக்கான நுழைவுக் கட்டணமாக சுமார் 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவாகும் என்றும், அந்தச் செலவு அரசுக்கு சுமையாக அமையாமல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர், அவரது சகோதரர்கள் மற்றும் குடும்ப அறக்கட்டளை இணைந்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அந்த முழுத் தொகையையும் வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மகிழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடு

குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இயற்கை, வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கவும் இந்த முயற்சி உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சமூகப் பணிகளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படும் விஜய் பிறந்தநாள் நிகழ்வுகளில், இந்த முறை உயிரியல் பூங்காக்களுக்கான இலவச நுழைவு திட்டம் முக்கிய கவனம் பெற்றுள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: கடும் வார்த்தை போர்! அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா..? நாங்க என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா..? மோதிக்கொள்ளும் திமுக -தவெக.!!