அண்ணணே சொல்லிவிட்டார் மு.க.ஸ்டாலின் என்றைக்கும் முதல்வராக முடியாது.! அமைச்சர் எஸ்பி வேலுமணி.!

அண்ணணே சொல்லிவிட்டார் மு.க.ஸ்டாலின் என்றைக்கும் முதல்வராக முடியாது.! அமைச்சர் எஸ்பி வேலுமணி.!


velumani tak about mk stalin

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கோவையில் நடத்தப்பட்ட கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், அம்மா அவர்கள் உருவாக்கிய தொண்டர்கள் மிகவும் விசுவாசமாக இருப்போம். தில்லு முல்லு வேலை செய்து ஆட்சியை கலைக்க பர்த்தார்கள், நானும் தங்க மணியும் சேர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாடுபட்டோம். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையாது என்று நினைத்தார்கள் பெரிய கூட்டணி அமைத்தோம். 

MK Stalin

இங்கு வந்த ஸ்டாலின் பல பொய்களை சொல்லி சென்று உள்ளார். யாராவது துண்டு சீட்டு கொடுத்தால் அப்படியே படித்து விட்டு சொல்லி விடுகிறார். நாங்கள் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம். எனவே வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் உரிமையோடு வாக்கு கேட்க எங்களால் முடியும். இலங்கையில் தமிழர்கள் பிரச்சனையில் 50 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவித்தார்கள். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த நீங்க என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். ஸ்டாலின் என்றைக்கும் முதலமைச்சர் ஆக முடியாது என்று அவரது அண்ணணே சொல்லி விட்டார் என அமைச்சர் தெரிவித்தார்.