அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
சீமானை மக்கள் ஏற்கவில்லை!. அமைச்சர் வன்னி அரசு சரமாரி விமர்சனம்!
புதிய சட்டப்பேரவை குறித்து சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீமான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத அரசியலை முன்னெடுத்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்த சீமான், சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்துடன் அரசியல் களத்தில் செயல்பட்டு வந்ததாகவும், ஆனால் அவரது அரசியல் நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சீமான் ஒருபோதும் செயல்படவில்லை என்றும், தொடர்ந்து வெறுப்பு அரசியலை விதைக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் இருப்பதாகவும் அமைச்சர் வன்னி அரசு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் எதிரான வகையில் சீமான் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் வன்னி அரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டமன்றமா… சினிமா தியேட்டரா? தவெக அரசை கடுமையாக சாடிய சீமான்!
முன்னதாக இன்று மதியம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய சட்டப்பேரவை குறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவர் தற்போது செயல்பட்டு வரும் சட்டமன்றக் கட்டடத்தில் என்ன பிரச்னை உள்ளது என்றும், அங்கு அமர்வதில் ஏதேனும் சிரமம் உள்ளதா என்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக தான் எங்களை கைவிட்டது.. நாங்கள் வெளியேறவில்லை.. திருமாவளவன் அதிரடி பேச்சு!