தவெக மற்றும் பாஜக-வுக்கு நடுவுல ரகசிய டீல்? ஒரே போடாய் போட்ட உதயநிதி ஸ்டாலின்!!!
Ïதமிழக அரசியலில் தவெக மற்றும் திமுக இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக மற்றும் பாஜக இடையே திரைக்குப் பின்னால் ரகசிய புரிந்துணர்வு இருப்பதாக அவர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக மீது உதயநிதியின் புதிய குற்றச்சாட்டு
செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மத்தியில் ஆளும் பாஜக அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக நேரடியாக குரல் கொடுக்க தவெக அரசு தயங்குகிறது என்று கூறினார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே வெளிப்படையாக தெரியாத அரசியல் ஒத்துழைப்பு இருப்பதாக சந்தேகம் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போதைய தவெக அரசு மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளின் பின்னணியிலும் பாஜகவின் அரசியல் தாக்கம் இருப்பதாகவும் அவர் விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ஆளும் தரப்பு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
திமுக திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறதா?
தவெக அரசு பெருமையாகச் சொல்லும் பல மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் உதயநிதி தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே புதிய பெயர்களில் அறிவித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
திராவிட மாடல் ஆட்சியின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை, புதிய கொள்கைகளாக மக்கள் முன் காட்ட முயற்சி நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். இதன் மூலம் அரசின் சாதனைகள் குறித்து தவறான தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
அரசியல் அரங்கில் சூடுபிடித்த விவாதம்
சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக தவெக மற்றும் பாஜக இடையேயான உறவு குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் அரசியல் கட்சிகள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன. அடுத்தகட்டமாக இதற்கு தவெக தரப்பு என்ன பதில் அளிக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.