CM விஜய்கு வந்த அடுத்த தலைவலி! பதவி வேணும்னா ரூ.5 லட்சம் கொடு.... N.ஆனந்த் விவகாரத்தை தொடர்ந்து அடுத்த பரபரப்பு....!!!



tvk-villupuram-secretary-bribery-allegation-gnanasounda

அரசு வழக்கறிஞர் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்த முன்னாள் நிர்வாகி ஞானசௌந்தரி, தற்போது விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் மீது புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு

அரசு வழக்கறிஞர் பதவியைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தன்னிடம் மோகன்ராஜ் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஞானசௌந்தரி தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கையை தாம் ஏற்க மறுத்ததாகவும், அதன்பிறகு மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் பதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்!

கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஞானசௌந்தரி வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தப் புகார்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

பரபரப்பை ஏற்படுத்திய புதிய புகார்

அமைச்சர் என். ஆனந்துக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து, தற்போது மாவட்ட நிர்வாகி மீது முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும், ஞானசௌந்தரி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மோகன்ராஜ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: வெடித்த புது வெடிகுண்டு... தவெக MLA ராஜினாமா?. சொந்த கட்சி நிர்வாகியே தூக்கிய போர்க்கொடியால் பரபரப்பு..! ஷாக்கில் CM விஜய்..!!!