யார் என்ன செய்தாலும்.... விஜய்யை வீழ்த்த முடியாது! ஆதரவு கடிதத்தோடு வந்த ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஒரு வார்த்தை.! மகிழ்ச்சியில் மக்கள்...!!



tvk-secures-majority-to-form-government-tamilnadu

தமிழக அரசியலில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த பரபரப்புக்கு முடிவு கட்டும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய தவெக ஆதரவு திரட்டும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்தும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்ததால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் பரவின. குறிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எண்ணிக்கையை எட்ட முடியாமல் தவெக தரப்பு சிக்கலில் இருந்தது.

இதையும் படிங்க: இன்று விஜய் எடுக்கப்போகும் இறுதி முடிவு... அடுத்த சில மணிநேரத்தில் அரங்கேறப்போகும் கிளைமாக்ஸ்! தீவிர முயற்சியில் விஜய்!!!

விசிக ஆதரவால் மாறிய அரசியல் கணக்கு

ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான மேஜிக் எண்ணிக்கையை எட்ட இன்னும் இரண்டு உறுப்பினர்கள் குறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வமாக தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதற்கான ஆதரவு கடிதமும் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதிய அரசு அமைப்பதற்கான தேவையான பலம் தற்போது தவெக தரப்புக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

“விஜய் முதல்வராக பதவியேற்கிறார்”

விசிக ஆதரவு கடிதத்தை பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, மிகுந்த உற்சாகத்துடன் “வெற்றி.. வெற்றி.. வெற்றி.. விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கிறார்” என்று அறிவித்தார்.

மேலும், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியாக இந்த கூட்டணி அமையும் என்றும் கூறினார். மக்களின் ஆதரவோடு தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வேகமெடுக்கும் அரசு அமைக்கும் பணிகள்

இதையடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் நடவடிக்கைகளும் விரைவில் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: BREAKING: திடீரென தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு களம் இறங்கிய கனிமொழி! அதிர்ச்சியில் அறிவாலயம்.!!!