முதல் கடவுள் நண்பன் தான்..... அப்புறம்தான் சாமி எல்லாம்! ஆபீஸில் மாஸ் காட்டிய தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத் ! முதல் கும்பிடு யாருக்குன்னு நீங்களே பாருங்க.... நெகிழ்ச்சி வீடியோ..!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ ஸ்ரீநாத் தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பராக அறியப்படும் அவர், தனது அலுவலகத்தில் வைத்திருக்கும் விஜய் புகைப்படம் அரசியல் வட்டாரத்திலேயே பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக அவர் நடந்து கொண்ட விதம் கட்சியினரிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
அலுவலகத்தில் பெரிய அளவில் விஜய் புகைப்படம்
தகவலின்படி, ஸ்ரீநாத் தனது அலுவலகத்தில் கடவுள் படங்களை விடவும் பெரிய அளவில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளார். அலுவலகத்திற்கு காலை நேரத்தில் வந்த அவர், முதலில் அந்த புகைப்படத்திற்கு வணக்கம் செலுத்துகிறார். அதன் பிறகே கடவுள் படங்களை கும்பிடும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
இந்தக் காணொளி வெளியாகிய சில மணி நேரங்களிலேயே பல சமூக வலைதளங்களில் பரவியது. தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர்கள் பலரும் இதை பகிர்ந்து, ஸ்ரீநாத் தனது நண்பர் விஜய்க்கு கொடுக்கும் மரியாதையின் வெளிப்பாடாக இதை விளக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த நிமிஷம் அவரே கண் கலங்கிட்டாரு... பெண் தொண்டரின் கண்ணீரை கண்டு உணர்ச்சிவசப்பட்ட விஜய்! தீயாய் பரவும் காட்சி!!!
அரசியல் வட்டாரத்தில் விவாதம்
ஒருபுறம் கட்சியினர் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். நண்பருக்கு காட்டப்படும் தனிப்பட்ட மரியாதையா அல்லது அரசியல் விசுவாசத்தின் வெளிப்பாடா என்ற விவாதமும் தற்போது அரசியல் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது.
இப்படி ஒரு நண்பனா..? கடவுளுக்கும் மேல் நண்பன் vijay-ஐ வழிபடும் mla srinath pic.twitter.com/1HYyUWn7mH
— Galatta Media (@galattadotcom) May 20, 2026
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யின் பிரபலத்தை பார்த்தீங்களா.... டோக்கியோ உணவக ஊழியர் செய்த செயலை பாருங்க! வைரலாகும் வீடியோ....!!!