அடுத்த அதிர்ச்சி... தவெக MLA ராமுவுக்கு திடீர் நெஞ்சுவலி! கதறித் துடிக்கும் தொண்டர்கள்...!!!
புதுச்சேரி மணவெளி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. ராமுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி
நேற்று காலை மணவெளி தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ராமு எம்.எல்.ஏ. பங்கேற்றிருந்தார். அதன் பின்னர் அவருக்கு முதுகு மற்றும் நெஞ்சுப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் மற்றும் உதவியாளர்கள் அவரை கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பத்தில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய புள்ளி...! இரவோடு இரவாக நடந்த கட்சி தாவல்... அதிகாலை அதிர்ச்சியில் எடப்பாடி..!!!
தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பு
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமு எம்.எல்.ஏ. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைக்கு திரண்ட கட்சி நிர்வாகிகள்
ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தவெகவைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது ராமுவும் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ரூட்டை மாற்றின பாஜக... டெல்லியில் இருந்து களமிறக்கப்பட்ட முக்கிய புள்ளி! வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு...!!!