#BREAKING: அமைச்சரின் தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. சொன்னதை செய்த தவெக ஆட்சியாளர்கள்..! பக்கா மாஸ் சம்பவம்.!
தவெக அமைச்சர் மதன் ராஜாவின் தந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வரதன் மதன் ராஜா. இவர் தமிழ்நாடு அமைச்சரவையில், சிறுகுறு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரின் தந்தைக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையை பார்க்க 500.. அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.!
தந்தைக்கு உடல்நலக்குறைவு:
இதனையடுத்து, உடனடியாக மதன் ராஜாவின் தந்தையை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரவில் இருந்து தந்தையுடன் இருந்து சிகிச்சையை கவனித்துக்கொண்டுள்ளார்.
சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை#MadhanRaja #TVKMinister #NellaiGH #CMVijay #Tirunelveli #News18TamilNadu #TamilNews pic.twitter.com/467zfdach3
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 28, 2026
அறிவுறுத்தல்:
தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தி இருந்த நிலையில், அதன் பேரில் மதன் ராஜா செயல்பட்டு இருக்கிறார்.
தரம் மேம்படும்:
அமைச்சர்கள், அவர்களின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பட்சத்தில், அங்கு சிகிச்சை மற்றும் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தைக்கு உதவியாக இருக்க மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு அமைச்சர் மதன் ராஜா அரசுப்பணிகளை கவனிக்க காலை புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: #சற்று முன் : நகைச்சுவை நடிகர் முத்துக்காளை மனைவி மாலதி உயிரிழந்தார்! கண் கலங்க வைக்கும் காட்சி...!!!