தவெக அமைச்சரவை ஆட்சியில் வேலுமணி, சி.வி.சண்முகத்திற்கு அதிருப்தி! முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு....!!!
Xd, eதமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பிற கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. ஆனால், ஆட்சியைத் தக்கவைக்க தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படுகிறது.
தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆதரவுடன் தவெக ஆட்சியைப் பிடித்தது. இதன் காரணமாக அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இதையடுத்து அக்கட்சிக்குள் கடும் அதிருப்தி உருவாகியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏற்பட்ட திருப்பம்
சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தனிப்பட்ட அணியாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தவெக அரசுக்கு ஆதரவளித்தால் அமைச்சரவை மற்றும் வாரியங்களில் முக்கிய பதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை இடம் குறித்து தவெக தயக்கம்
தொடக்கத்தில் அதிமுக தரப்புக்கு ஐந்து அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்படும் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தவெகவை ஊழலற்ற ஆட்சிக்கான மாற்று சக்தியாக மக்கள் மத்தியில் முன்னிறுத்தி வந்த நிலையில், தற்போது ஆதரவு அளித்துள்ள சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. இவர்களை அமைச்சரவையில் சேர்த்தால், தவெகவின் நேர்மையான பிம்பம் பாதிக்கப்படும் என்ற கருத்து கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு ஆலோசகர்கள் எச்சரிக்கை?
தவெகவின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர், அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்குவது கட்சியின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விஜய்க்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தவெக, தற்போது அதே கட்சியினருக்கு பதவி வழங்கினால் அது திமுகவுக்கு அரசியல் ஆயுதமாக மாறிவிடும் என்ற அச்சமும் தலைமை தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், தவெக தரப்பில் இருந்து சாதகமான அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கே.சி. வீரமணி, பெஞ்சமின் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், “அமைச்சரவை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும், பொறுமையாக இருங்கள்” என்று எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனினும், இன்னும் சில நாட்களில் பதவி விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படாவிட்டால், பலரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பக்கூடும் என்ற பேச்சு அதிமுக வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.