டைவர்ஸ் வாங்கின கையோடு.. வீட்டை விட்டு வெளியேறிய நிலா.! அய்யனார் துணை குடும்பம் அதிர்ச்சி.!
அன்னையர் தினத்தில் விஜய் அம்மாவுக்கு கொடுத்த பெரிய கிப்ட்....அளவுகடந்த மகிழ்ச்சியில் விஜய் அம்மாவை கட்டிப்பிடித்து மகிழ்ந்த த்ரிஷா! வைரலாகும் வீடியோ...!!!
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கிய வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகை த்ரிஷா வருகை நிகழ்ச்சியில் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.
நேரு அரங்கில் கோலாகல பதவியேற்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். காலை முதலே அரங்கம் முழுவதும் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய் பதவியேற்ற தருணத்தில் முழக்கங்களும் கைதட்டல்களும் அரங்கையே அதிரவைத்தன.
நீல நிறப் புடவையில் வந்த நடிகை த்ரிஷா, விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் அவரது சகோதரியை சந்தித்து கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். அவரின் வருகை தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: BREAKING: குதூகலத்துடன் துள்ளி குதித்து விஜய் பதவியேற்பு விழாவிற்கு வந்த நடிகை திரிஷா! வைரலாகும் வீடியோ..!!!
அன்னையர் தினத்தில் ஷோபாவின் நெகிழ்ச்சி
மகன் முதலமைச்சராக பதவியேற்றதை பார்த்த ஷோபா சந்திரசேகர் உணர்ச்சிவசப்பட்டார். “இன்று அன்னையர் தினம். இந்த நாளில் என் மகன் முதலமைச்சராகி எனக்கு மிகப்பெரிய பரிசை கொடுத்திருக்கிறார்” என்று அவர் பேசியது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
இதையடுத்து பல திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்டோர், அரசியல் பயணத்தில் விஜய் சந்தித்த சவால்கள் மற்றும் விமர்சனங்களை நினைவுகூர்ந்து அவரது வெற்றியை பாராட்டினர்.
தொண்டர்களிடையே உற்சாகம்
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய், குறுகிய காலத்திலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரங்கம் வெளியிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு கொண்டாடியதால் சென்னை நகரின் பல பகுதிகளில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
VIDEO | Chennai: Actor Trisha Krishnan warmly greets TVK chief Vijay's sister and mother as she arrives at Jawaharlal Nehru Indoor Stadium for his swearing-in as Tamil Nadu CM.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/tePCyk9uHa
— Press Trust of India (@PTI_News) May 10, 2026
विजय थलापति की माँ शोभा चंद्रशेखर का भावुक कर देने वाला बयान ,
" आज में बहुत खुश हूं , आज मुझे मातृ दिवस पर मेरे बेटे ने मुख्यमंत्री बनकर गिफ्ट दिया है , ये मेरे लिये नहीं बल्कि पूरे तमिलनाडु के लोगो के लिये गर्व की बात है " ,pic.twitter.com/P17aN0rV8h
— Nargis Bano (@Nargis_Bano78) May 10, 2026
இதையும் படிங்க: இத யாருமே எதிர்பார்க்கல.... மேடையில் மேஜையை தூக்கிச் சென்ற CM விஜய்! வைரலாகும் அந்த ஆச்சரிய காட்சி...!!!