மணல் கடத்தலை தடுக்கச்சென்ற அரசு அதிகாரியை கடித்து, அடித்து அனுப்பிய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம் - தலைமை உத்தரவு.!

மணல் கடத்தலை தடுக்கச்சென்ற அரசு அதிகாரியை கடித்து, அடித்து அனுப்பிய திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம் - தலைமை உத்தரவு.!



Trichy Thuraiyur DMK Supporter Sand Smuggling Revenue Inspector Attacked

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் நரசிங்கபுரம் கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெறுகிறது என துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொள்ள தாசில்தார் உத்தரவிட்டார். 

தாசில்தாரின் உத்தரவின் பேரில் நரசிங்கபுரம் பகுதியில் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்ட போது, அரசு புறம்போக்கு நிலத்தில் மண் வெட்டி கடத்தப்பட்டது உறுதியானது. 

இதனை கண்ட பிரபாகரன் அங்கிருந்து ஜே.சி.பி வாகனத்தின் சாவியை எடுத்து சென்று இருக்கிறார். அவரை வழிமறித்த ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜே.சி.பி உரிமையாளர் தனபால் உட்பட 3 பேர் அவரை கைகள் மற்றும் கற்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். 

சம்பவ இடத்தில் இருந்த மணி என்பவர் வருவாய் ஆய்வாளரை கடித்ததாகவும் கூறப்படுகிறது. காயங்களால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி ஓட்டுநர் தனபால் ஆகியோரை கைது செய்தனர். 

மேலும், மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கியதாக திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.