அழைப்பு விட்டது உண்மை தான்.... ஆனால் விஜய் கட்சிக்கு நோ சொன்ன ரகசியத்தை உடைத்த திருமாவளவன்! அந்த ஒரு வார்த்தை தான் தமிழக அரசியலை உலுக்கியது..!!!



thirumavalavan-explains-why-vck-did-not-join-tvk-allian

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணையாததற்கான காரணத்தை அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமாக தெரிவித்துள்ளார். தவெக தரப்பில் இருந்து கூட்டணிக்கான அழைப்பு வந்ததை உறுதிப்படுத்திய அவர், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அந்த அழைப்பை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

தவெக தரப்பில் இருந்து வந்த அழைப்பு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அருண்ராஜ் என்பவர் தன்னை தொடர்புகொண்டு கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். இதன்மூலம், தவெக மற்றும் விசிக இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல்களுக்கு அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தல் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்....திருமாவளவன் திடீரென பின்வங்கினார்! முடிவை மாற்றியதால் அரசியலில் புதிய பரபரப்பு.!!!

திமுக கூட்டணியில் தொடர்ந்ததற்கான காரணம்

தற்போதைய அரசியல் சூழலில் இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணி முக்கியமான அரசியல் அணியாக இருப்பதாக திருமாவளவன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், விசிக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினால் அது கூட்டணியின் பலவீனத்திற்கும் அரசியல் சரிவிற்கும் காரணமாக பார்க்கப்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால் தற்போதைய கூட்டணியை விட்டு விலகுவது சரியான முடிவாக இருக்காது என கருதியதாகவும் தெரிவித்தார்.

‘வரலாற்றுப் பிழைக்கு காரணமாக விரும்பவில்லை’

திமுக கூட்டணியின் வீழ்ச்சிக்கு தானே காரணம் என்ற விமர்சனத்திற்கோ அல்லது வரலாற்றுப் பிழை என்ற அடையாளத்திற்கோ ஆளாக விரும்பவில்லை என்று திருமாவளவன் வெளிப்படையாக கூறினார். அதனால்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அழைப்பை மரியாதையுடன் நிராகரித்து, தற்போதைய கூட்டணியிலேயே தொடர முடிவு செய்ததாக விளக்கமளித்தார்.

திருமாவளவனின் இந்த கருத்துகள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி கணக்குகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

 

இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்! துணை முதல்வர் பதவி... முதல்வர் விஜய் போன் காலில் சொன்ன அந்த ஒரு வார்த்தை! சீக்ரெட்டை உடைத்த திருமாவளவன்....!!!