தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைகிறாரா? அவரே கூறிய விளக்கம்! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைகிறாரா? அவரே கூறிய விளக்கம்!


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.களில் ஒருவர் ஆவார். நேற்று தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், தினகரனின் அமமுக கட்சியை மக்கள் ஏற்கவில்லை என கூறியுள்ளார்.

இந்தநிலையில் டிடிவி தினகரனின் வலது கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவுக்கு செல்ல தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க அதிமுக தரப்பு ஒப்புக்கொண்டதால் விரைவில் அவர் முதல்வர் ஈபிஎஸ் முன் அதிமுகவில் இணைவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தினகரன் கூறுகையில்,  எங்களை லெட்டர்பேட் கட்சி என்று விமர்சிப்பவர்கள் எங்களது கட்சியினரை பொய் சொல்லி ஏமாற்றி அவர்களது கட்சியின் இணைக்கின்றனர். ஆனால், அவர்கள் மீண்டும் எங்களது கட்சிக்கே வந்துவிடுகின்றனர் என தெரிவித்தார். 

 தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது குறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் கூறுகையில், கட்சியிலிருந்து நான் விலகி , அதிமுகவில் இணைவது குறித்து வெளியான தகவல்கள் உண்மையல்ல. சிலர் வேண்டுமென்றே தவறாக வதந்திகளை பரப்பி வருகின்றனர் என கூறியுள்ளார்.
 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo