சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை....! திமுகவினர் கடும் அமளி.!!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை ஆற்றியபோது, டாஸ்மாக்கில் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலிக்கப்படுவதாக அவர் கூறிய கருத்து அவையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால்l சில நேரம் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
அவையில் பரபரப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு
முதலமைச்சரின் பேச்சின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் ஆவுடையப்பன் பலமுறை அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், தி.மு.க உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்தனர். இதனால் அவையில் சலசலப்பு நீடித்தது.
இதையும் படிங்க: சற்று முன்.... சட்டமன்றத்தில் திடீர் பரபரப்பு! எடப்பாடி தலைமையில் அதிமுக வெளிநடப்பு....!!!
ஆளும் தரப்பு - எதிர்க்கட்சி நேரடி மோதல்
அமளி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், த.வெ.க உறுப்பினர்களை நோக்கி தி.மு.க உறுப்பினர்கள் ஒருமையில் பேசியதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டினார். இதையடுத்து அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேசி, அவை விதிகளை அனைவரும் மதித்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், முதலமைச்சரின் உரை நிறைவடைந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்தார்.
விஜயின் பதிலுரை கவனம் ஈர்ப்பு
நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு அவை நடவடிக்கைகள் மீண்டும் சீரானது. அப்போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மக்கள் பணி செய்ய தெரிந்த அளவிற்கு த.வெ.க அரசுக்கு ஊழல் செய்ய தெரியாது” என்று தெரிவித்தார். அதேபோல், “இது மக்களாட்சி; அரசை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது” என்றும் கூறினார்.
டாஸ்மாக் தொடர்பான இந்த சட்டமன்ற விவாதம், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே கடும் அரசியல் மோதலை வெளிப்படுத்தியதுடன், மாநில அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது.