அப்படியே ஓப்பனாக சொல்லிட்டாரு... பாட்டு பாடி அசத்திய தவெக பெண் எம்எல்ஏ.... ரசித்து கேட்ட CM விஜய்! வைரல் வீடியோ..!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு, இலவச காப்பீட்டு தொகை அதிகரிப்பு என தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் சட்டப்பேரவையில் கவனம் பெற்றது.
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார்; மாதம் ரூ.75 ஆயிரம் பராமரிப்பு தொகை
விசிக எம்எல்ஏ ஜோதி மணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அதன்படி, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் மற்றும் ஒரு உதவியாளர் வழங்கப்படும். மேலும், காரின் பராமரிப்புக்காக மாதம் ரூ.75 ஆயிரம் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒரே நாளில் மாறிட்டுச்சே.... விஜய் அரசுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக் டிரீட்மென்ட்.... பதறும் தவெக... எகிரும் திமுக..!!!
அறிவிப்பு வெளியானதும் சட்டப்பேரவையில் இருந்த எம்எல்ஏக்கள் மேசையைத் தட்டி தங்களது வரவேற்பை தெரிவித்தனர். இதையடுத்து தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ சிந்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாடல் பாடினார். அவரது இந்த வித்தியாசமான நன்றி தெரிவிப்பு அவையில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
‘என்னிடம் கார்கள் இருந்தாலும் முதல்வர் கொடுக்கும் காரில்தான் செல்வேன்’
மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ காமராஜு பேசுகையில், தன்னிடம் ஏற்கனவே 3, 4 கார்கள் இருப்பதாக தெரிவித்தார். இருந்தாலும் முதலமைச்சர் வழங்கும் காரில் தொகுதிக்குச் செல்வது தனிப்பட்ட பெருமை என்றும் அவர் கூறினார்.
“என்னிடம் எத்தனை கார்கள் இருந்தாலும், முதலமைச்சர் கொடுத்த கார் என்றால் அதற்கு தனி பெருமை இருக்கிறது. அந்த காரில் தொகுதிக்குச் செல்லும்போது ஒரு கெத்தாக இருக்கும். எனவே இனி முதலமைச்சர் வழங்கும் காரில்தான் தொகுதிக்கு செல்வேன்” என்று காமராஜு தெரிவித்தார்.
பேரவையில் கவனம் ஈர்த்த சிந்து எம்எல்ஏவின் பாடல்
தொடர்ந்து சிந்து எம்எல்ஏ பாடல் பாடி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தது பேரவையில் பேசுபொருளானது. ஏற்கனவே அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகளால் கூட்டத்தொடர் பரபரப்பாக இருந்த நிலையில், எம்எல்ஏக்களுக்கான கார் மற்றும் பராமரிப்பு தொகை குறித்த அறிவிப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த நன்றி தெரிவிப்புகளும் அவையின் கவனத்தை பெற்றன.
#WATCH | என்கிட்டயும் 3,4 கார் இருக்கு.. ஆனாலும் CM கொடுத்த காரில் சென்றால்தான்.. – மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ்#SunNews | #TNAssembly | #TVKVijay pic.twitter.com/SvMUmSRtsg
— Sun News (@sunnewstamil) August 19, 2026
#WATCH | “அனைத்து MLA-வுக்கும் கார்” – பாடல் பாடி நன்றி தெரிவித்த தவெக எம்.எல்.ஏ. சிந்து#SunNews | #TNAssembly | #TVKVijay pic.twitter.com/6uZhzAxojk
— Sun News (@sunnewstamil) August 19, 2026