பாதுகாப்பு வாகனங்களை அதிரடியாக குறைந்த ஆளுநர் அர்லேகர்! இனி 10 இல்ல 4 கார்கள் தான்..! குவியும் பாராட்டுக்கள் பல பல..!!!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை ராஜ்பவன் திடீரெனக் குறைத்துள்ளது. இதுவரை 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அது 4 ஆக மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதனை ஏற்றுக்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு அணிவகுப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
10 வாகனங்களில் இருந்து 4 ஆக குறைப்பு
இதுவரை ஆளுநர் பயணிக்கும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக காம்பிரஹென்சிவ் முறையில் 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதில் பாதுகாப்பு படையினர், அதிகாரிகள் மற்றும் எஸ்கார்ட் வாகனங்களும் இடம்பெற்றிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குஷியோ குஷி! தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000-ஆ..? அது எப்போ தெரியுமா?
தகவலின்படி, தேவையற்ற எரிபொருள் செலவை குறைக்கும் நோக்கத்திலேயே இந்த மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எரிபொருள் சிக்கனம் தொடர்பாக அரசு மட்டத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பாராட்டு
ஒரு மாநிலத்தின் ஆளுநரே தன்னுடைய பாதுகாப்பு மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜ்பவன் எடுத்த இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
சிலர் இதை முன்மாதிரி முடிவாக வரவேற்றுள்ள நிலையில், அரசுத் துறைகளிலும் இதுபோன்ற சிக்கன நடவடிக்கைகள் தொடர வேண்டுமெனவும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் தவித்த தவெக தொண்டர்கள்... சங்கீதாவின் திடீர் மன மாற்றத்தால் மகிழ்ச்சியில் விஜய்..!!!