நடைபயிற்சியையும் அரசியலாக்கும் சாமர்த்தியம்; பலிக்குமா ஸ்டாலினின் தந்திர அரசியல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தர்மபுரி மாவட்டத்தில் தங்கி திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்காக வாக்கு சேகனித்து வருகிறார். தர்மபுரி தனியார் விடுதியில் தங்கியிருந்த ஸ்டாலின் காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போதே தனது வாக்கு வேட்டையை துவங்கிவிட்டார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய எம்பியான அன்புமனி ராமதாஸ் இந்தமுறை அதிமுக கூட்டணி வேட்பாளராக பாமாக கட்சகயிலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் செந்தில்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாமகவின் கோட்டை என்பதால், அங்கு அன்புமனியை தோற்கடித்து பாமகவின் சாம்ராஜ்யத்தை சரிக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனால் அந்த தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் இரண்டு நாட்களாக ஈடுபடுகிறார் ஸ்டாலின்.
நேற்று இரவு தர்மபுரியில் ஒரு தனியார் விடுதியில் தங்கிய ஸ்டாலின் அதிகாலையே எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டார். இது சாதாரன நடைபயிற்சியாய் இல்லாமல் அதனையும் அரசியலாக்கி மக்களை சந்திக்க துவங்கிவிட்டார் ஸ்டாலின்.
வழக்கமான பிரச்சாரமாக இல்லாமல், சாதாரணமான ட்ராக், டிசர்ட் அணிந்து வந்த ஸ்டாலின் பல்வேறு இடங்களில் கூடிய மக்களை நேரில் சந்தித்து திமுகவிற்கு ஆதரவு திரட்டினார். ஆவின் பாலகத்தில் வரிசையில் நின்ற மக்கள், தள்ளுவண்டி கடை வியாபாரிகள், உழவர் சந்தைக்கு வந்த வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் மிகவும் எளிமையாக சந்தித்து உரையாடினார்.
நடைபயிற்சியையே சாமர்த்தியமாக அரசியலாக மாற்றியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் செயலை நினைத்து பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதைப் போன்ற சிறுசிறு செயல்களால் மக்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சிக்கும் ஸ்டாலினின் சாமர்த்தியத்தை தேர்தல் முடிவில் பார்க்கலாம்.