அரசியல் தமிழகம்

சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு அடுத்த சிக்கல்.! ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம்!

Summary:

sasikala's 300 crore worth of assets frozen

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.  சசிகலா தரப்பினர் 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துகளை முடக்கியது தொடர்பாக விளக்கமளிக்க, பதிவுத்துறை அலுவலகங்களுக்கு சசிகலா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சசிகலா விடுதலையை தள்ளிப்போடும் நோக்கில் செய்யப்படுவதாக அமமுக-வினர் கருத்து தெரிவிக்கின்றனர்.


Advertisement