கட்சி இப்போது துவங்கப் போவதில்லை; மீண்டும் தாமதிக்கும் ரஜினிகாந்த்! எரிச்சலில் ரசிகர்கள்

கட்சி இப்போது துவங்கப் போவதில்லை; மீண்டும் தாமதிக்கும் ரஜினிகாந்த்! எரிச்சலில் ரசிகர்கள்


rajinikanth-about-politics

பேட்டை திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் போது இப்போது கட்சி துவங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

பேட்டை படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

rajinikanth

அப்போது வரும் டிசம்பர் மாதம் கட்சி துவங்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த், இல்லை; டிசம்பர் மாதத்தில் கட்சியை பற்றிய அறிவிப்பு வெளியிடப் போவதில்லை. ஆனால் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் நிறைவடைந்துவிட்டன கூடிய விரைவில் நேரம் காலம் பார்த்து கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எப்போது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு இது எரிச்சலூட்டும் வகையில் அமைந்துள்ளது.

rajinikanth

#MeToo அமைப்பை பற்றி எழுப்பிய கேள்விக்கு #MeToo பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு சிறந்த அமைப்பு. ஆனால் அதனை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என தெரிவித்தார்.

மேலும் சபரிமலை விவகாரத்தில் உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு ஆண் பெண் இருவரும் சமமானவர்கள் என்ற நிலைப்பாடு சரியானதுதான். ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.