மோடியை புகழும் ரஜினி! ரஜினியின் அரசியல் தந்திரம் துவங்கிவிட்டதா!

மோடியை புகழும் ரஜினி! ரஜினியின் அரசியல் தந்திரம் துவங்கிவிட்டதா!



rajini talks about modi

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பயணத்தை பற்றி அறிவித்த ரஜினி தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்கான நிர்வாகிகளை நியமித்த ரஜினி தற்போது வரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துகளை தனது செய்தியாளர் சந்திப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார். 

அதேசமயம் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி. அடுத்தடுத்து ரஜினியின் படங்கள் வெளியாகின்றன. கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகிய 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பொங்கலுக்கு பேட்ட திரைப்படம் வெளியாகும் நிலையில் உள்ளது. 

rajinikanth

இந்நிலையில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரஜினியிடம் அரசியலில் கமல் உங்களுக்கு போட்டியாளரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “அரசியலில் அவரை எனக்கு போட்டியாளராக கருதவில்லை. அவர் எனக்கு சக நடிகர்; நல்ல நண்பர். அரசியலில் நுழைந்தால் நான் நானாக இருப்பேன். அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு 67 வயதாகிறது, இந்த வயதில் அரசியலில் நுழைவது எளிதல்ல" என்று கூறினார். 

மேலும் பிரதமர் மோடி குறித்து கருது தெரிவித்த ரஜினி, "மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்" எனக் கூறினார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்துப் பதிலளித்த அவர், ``தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடம் கூடிய விரைவில் நிரப்பப்பட வேண்டும். தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள்" என கூறியுள்ளார்.