தலைவிரித்தாடும் ஊழல் - முன்னாள் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு.!puducherry-former-cm-narayanasamy-pressmeet

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக தலையிலான புதுச்சேரி மாநில ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. இலஞ்சம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டினார். 

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்திக்கையில், "இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து இருக்கிறது. பல மாநிலத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. 

puducherry

முதல் இரண்டு கொரோனா அலைகளில் பல மக்கள் பலியாகியுள்ளனர். இப்போது, ஒமிக்ரான் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலயில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்துள்ளது. இவை நீதிமன்ற விதிமுறைக்கு எதிரானது ஆகும். என்.ஆர் காங்கிரஸ் - பாஜக தலைமயிலான ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. இலஞ்சம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இதற்கு மக்களிடம் ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.