வாக்களித்தால் ரூ.7000 பரிசு.!தேர்தல் ஆணையத்தின் அசத்தல்! தேர்தலுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்!

வாக்களித்தால் ரூ.7000 பரிசு.!தேர்தல் ஆணையத்தின் அசத்தல்! தேர்தலுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்!


price for vote


முதன் முறை வாக்காளர்கள் கைவிரலில் மையுடன் செல்பி எடுத்து அனுப்பினால், முதல் பரிசாக ரூ.7000 வழங்கப்படும் என்று இந்தியாவில் மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி மட்டுமே இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது.

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியான மிசோரமில் மொத்தம் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை மிகக்குறைவான அளவில் வாக்குப்பதிவு நடந்ததால், வரும் தேர்தலில் அதனை அதிகரிக்க தேர்தல் துறை திட்டமிட்டது.

vote

அதன்படி, தேர்தல் நாளான 11 ஆம் தேதி முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள ‘மை’யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த செல்பியை தேர்தல் ஆணையத்தின் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்ப வேண்டும். தேர்வாகும் முதல் செல்பிக்கு ரூ.7000 பரிசாகவும், 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசாகவும் வழங்கப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.