அப்போ இனிச்சிது இப்போ கசக்குதா.? பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை வெளுத்து வாங்கிய பொள்ளாச்சி ஜெயராமன்.!pollachi-jayaraman-about-evvelus-house-it-raide

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை மனுவை வழங்கினார். பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், சென்ற 6 மாத காலமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் வருவதில்லை. அரசு அதிகாரிகளிடம் இது தொடர்பாக பலமுறை கடிதம் வழங்கியும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கியிருக்கிறோம். இதுகுறித்து ,விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென்றால் அதிமுக சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Pollachi jayaramanஅதிமுக ஆட்சிக் காலத்தில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதுப்பித்த திட்டத்தின் மூலமாக குடிநீர் வரவில்லை. எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர் என்பதால் ஆளும் தரப்பினர் பழி வாங்குகிறார்களா என்று தெரியவில்லை. காவல்துறையை பொருத்தவரையில் ஆளும் தரப்பின் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Pollachi jayaramanபொதுப்பணித்துறை அமைச்சர் தொடர்புள்ள பகுதிகளில் நடந்து வரும் சோதனை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது இனித்தது, தற்போது கசக்கிறதா? உப்பை சாப்பிட்டவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார் முன்னாள் சட்டசபை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.