அதிமுக-வுடன் கூட்டணி அமைத்த ஒவைசி.!! தமிழகத்தில் ஓங்கும் எடப்பாடியின் கை.!!

அதிமுக-வுடன் கூட்டணி அமைத்த ஒவைசி.!! தமிழகத்தில் ஓங்கும் எடப்பாடியின் கை.!!



owaisi-aimim-party-join-hands-with-admk-for-lok-sabha-e

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது . கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்த அதிமுக இந்த முறை தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

politicsதேமுதிக எஸ்டிபிஐ புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்த நிலையில் ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஏஐஎம்ஐஎம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. அசாதுதின் ஓவைசி தலைவராக இருக்கும் இந்த கட்சி கடந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டது.

politicsஇந்தத் தேர்தலில் அமமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதால் அதிமுகவுடன் ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணி அமைத்து இருக்கிறது. இஸ்லாமிய சமூக மக்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு பெற்றுள்ள இந்தக் கட்சி அதிமுகவுடன் இணைந்திருப்பது சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்க செய்யும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.